மாநகர முதல்வரின் செய்தி

மொறட்டுவை மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழக்கையை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் மொறட்டுவை மாநகர சபையின் இணையத்தளத்தை புதிய நிர்வாகத்தின் கீழ் உயிர்ப்பித்து திறனாக பராமரிப்பதில் மிகுந்த பெருமை அடைகின்றேன்.
அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைக்கு இணங்க, பொதுமக்களுக்கு மிகவும் எளிதாக மாநகர சபையுடனான தங்கள் உறவை பேணுவதற்கு இந்த வலைத்தளம் பெரும் உதவியாக அமையும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
இந்த வலைத்தளம் மூலம் தற்போது குடிமக்களுக்கு வரிப்பணம் செலுத்தும் வசதிகள், அத்தியாவசிய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதிகள் வழங்கப்படுவதுடன் எதிர்காலத்தில் குடிமக்களுக்கு நிகழ்நிலை முறை ஊடாக மாநகர சபையிலிருந்து வழங்கக்கூடிய சேவைகளை மிகவும் இலகுவாகவும், பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் நடாத்திச் செல்வதற்கு நாங்கள் எதிர்பர்ர்க்கின்றோம்.
எங்கள் சேவைகளை மேலும் திறம்படச் செய்வதற்கு உங்கள் கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளைப் பெறும் வசதியும் இந்த வலைத்தளத்தில் உள்ளது.
மொறட்டுவை மாநகர சபை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குடிமக்களுக்கு பயனுறுதியான சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாக புதிய நிர்வாகத்தின் கீழ், நிறுவப்படும் என்று மொறட்டுவை குடிமக்களுக்கு நான் உறுதிமொழிகின்றேன்.
கே.டி.நிஷாந்த பிரதினாந்துஇ
மாநகர முதல்வர்
மொறட்டுவை மாநகர சபை











































Visit Today : 131
This Month : 5610
This Year : 5610