எங்களைப் பற்றி

அறிமுகம்

தொலை நோக்கு

“சகல பிரஜைகளுக்கும் சிறந்ததொரு வாழ்க்கை நிலை”

பணிக் கூற்று

“மனித வளத்தின் ஊடாகவும் அனைத்து வரிகளினாலும் பிரஜைகளின் வளமான, வசதியான, ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல், மனித வளங்களை அபிவிருத்திச் செய்வதனூடாக அறிவு, ஞானம் உடைய எதிர்கால சந்ததியினரை நிறுவுவதால் மொறட்டுவை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியின் அபிவிருத்தியை உறுதி செய்தல்.”

இலக்குகள்

“பொது சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள், பொதுவான சாலைகள் மற்றும் வீதிகள் தொடர்பான நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். மேலும், பிரஜைகளின் வசதிகள், பாதுகாப்பு மற்றும் மாநகர செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநகர சபை நிருவப்பட்டுள்ளது.”

நோக்கங்கள்

“மாநகர சபை, மாநகர சபை நியமங்கள் அல்லது வேறு ஏதேனும் நியமம் அல்லது வேறு ஏதேனும் எழுதப்பட்ட சட்டம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட நிலையான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேநங்களின் உள்ளுர் அதிகாரம் உடைய நிருவனமாக விளங்குகிறது. இது அனைவரின் ஒழுங்குமுறை, கட்டுப்பாடு மற்றும் நிர்வாக விடயங்களுடன் தொடர்புபட்ட போது சுகாதாரம், பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொது வழித்தடங்கள் மற்றும் பொதுவான சௌகரியமான பாதுகாப்பு, வசதி மற்றும் நலனைப் பாதுகாத்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியது.”

உள்ளுர் சபை – மொறட்டுவை

மொறட்டுவை 1800 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து ஒரு தனி உள்ளுராட்சி அமைப்பாக மாறியது. ஊள்ளுர் சபையாக முதல் உள்ளுர் சபை கூட்டம் 1908 ஜனவரி 09 அன்று அரசு முகவர் ஒபிசியா தலைமையில் நடைபெற்றது. ஜி.ஏ தவிர இரண்டு அரசாங்க அதிகாரிகள் மற்றும் மூன்று பொது மக்கள் பிரதிநிதிகள் உள்ளுர் சபையின் அங்கம் வகித்தனர்.

முதல் உள்ளுர் சபை

தலைமை தாங்கியவர் – எல். டுப்ளியூ. பூத் (அரச முகவர்)
அரச அதிகாரிகள் – தாமஸ் ஹென்றி ஆர். டி. சொய்சா, ஜே. க்ரோல்
பொது பிரதிநிதிகள் – கிரிகோரி மார்சலின் டி சில்வா, ஜே. மெத்தயாஸ் மால், ஹியூ டி மால்

மொறட்டுவை நகர சபை

1930 இல் மொறட்டுவை நகர சபையாக மாறியது. எட்டுக்கும் குறைவான நகர வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கவுன்ஸிலர்கள் மற்றும் 4 பரிந்துரைக்கப்பட்ட கவுன்ஸிலர்கள் காணப்பட்டனர். முதல் நகர சபைக் கூட்டம் 1930 ஜனவரி 01 ஆம் திகதியன்று நடைபெற்றது.

மொறட்டுவை நகர சபையின் முன்னாள் தலைவர்கள்

1930 – 1932 திரு எச். ஐ. பெர்னாண்டோ
1933 – 1935 திரு சீ.எஸ்.ஏ. பெரேரா
1936 – 1938 திரு சீ.எஸ்.ஏ. பெரேரா
1939 – 1941 திரு எச். ஐ. பெர்னாண்டோ
1942 – 1944 திரு ஏ.சீ.டப்ளியூ. பீரிஸ்
1945 – 1947 திரு டி. ஈபர்ட் பெர்னாண்டோ
1948 – 1950 திரு எஸ்.எல்.ஜே. த சில்வா
1951 – 1953 திரு ஆர்.பி பெர்னாண்டோ
1954 – 1956 திரு ஆர்.பி பெர்னாண்டோ
1957 – 1959 திரு டி.டப்ளியூ.எம். பெர்னாண்டோ
1960 – 1962 திரு எச்.டப்ளியூ. ஸ்டான்லி பெர்னாண்டோ
1963 – 1964 திரு பி.எம் பெர்னாண்டோ
1965 – திரு எச்.டப்ளியூ. ஸ்டான்லி பெர்னாண்டோ
1966 – 1969 திரு டி.எல்.சி பெர்னாண்டோ
1969 – திரு பி.எஸ். டக்ளஸ் பெர்னாண்டோ
1970 – 1973 திரு ஜெயசுமன தர்மபந்து
1973 – 1979 சிறப்பு ஆணையரின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது.
1979 – 1991 திரு பி.டி சுசாந்தா சிரிரத்னே
1992 – 1995 திரு எச்.ஆர்.ஜே லலித் நோனிஸ்
1995 – 1997 திரு தர்மசன் ஜே. மெண்டிஸ்

மொறட்டுவை நகர சபையின் முன்னாள் துணைத் தலைவர்கள்

1930 – 1932 திரு சீ.எஸ்.ஏ. பெரேரா
1933 – 1934 திரு ஏ.சீ.டப்ளியூ. பீரிஸ்
1934 – 1935 திரு டி. ஈபர்ட் பெர்னாண்டோ
1936 – 1939 திரு சி. ஹூபர்ட் எ மால்
1940 – 1941 திரு எஸ்.ஓ. ஸ்டெம்பு
1942 – திரு ஐ.எல்.எம். ரளீம்
1943 – 1944 திரு எஸ்.எல். டி மெல்
1945 – 1950 திரு எல்.இ. பெர்னாண்டோ
1951 – 1953 திரு எஸ்.வி. பெர்னாண்டோ
1954 – 1955 திரு எஸ்.எல். டி மெல்
1956 – 1958 திரு டி.டி.ஜே. பீரிஸ்
1959 – திரு எச்.டப்ளியூ. ஸ்டான்லி பெர்னாண்டோ
1960 – திரு பி.எஸ். பெர்னாண்டோ
1961 – திரு பி.எம். பெர்னாண்டோ
1962 – திரு சிரில் எஸ் பெர்னாண்டோ
1963 – திரு நியூட்டன் ஐ.டி. சில்வா
1964 – திரு டோல்பர்ட் எல்.எஸ்.டி சில்வா
1965 – திரு டி.டி.ஜே. பீரிஸ்
1966 – திரு பி.எம். பெர்னாண்டோ
1967 – திரு பி.எஸ். டக்ளஸ் பெர்னாண்டோ
1968 – திருமதி ட்ரிக்ஸி எல் மெண்டிஸ்
1969 – திரு பி.எஸ். டக்ளஸ் பெர்னாண்டோ
1969 – திரு ஜெயசுமன தர்மபந்து
1970 – 1971 திரு டப்ளியூ.எல்.எம். பெர்னாண்டோ
1972 – 1973 திரு பி.எஸ். டக்ளஸ் பெர்னாண்டோ
1973 – 1979 சிறப்பு ஆணையரின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது.
1979 – 1991 திரு எல். டென்சில் எச்.டி சில்வா
1991 – 1993 திரு எஸ்.டி.எச்.எல். ரணசிங்க
1993 – 1995 திரு தாம்சன் ஜேமெண்டிஸ்
1995 – 1997 திரு தம்மிகா பெர்னாண்டோ

முன்னாள் சிறப்பு ஆணையாளர்

திரு என்.டி.என். குணசேகர
திரு டக்ளஸ் எஃப். குணவர்தன
திரு எம்.டப்ளியூ.எஸ். குணசேகர
திரு டப்ளியூ எஸ். ரத்னபால
திரு பரகும் விஜேசிங்க
திரு கே.ஜி. குணரத்ன
திரு டி.ஏ. வடுகே
திரு ஏ.ஜி. யசானந்தா

மொறட்டுவை மாநகர சபை

1997 ஆம் ஆண்டில் மொறட்டுவை மாநகர சபை மாநகர சபையாக மாறியது. தற்போது மாநகர சபையில் 29 மாநகர வட்டாரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 48 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாநகர வட்டாரங்கள்

1. அங்குலான
2. கல்டேமுள்ள
3. பொறுபன
4. தெலவல
5. சொய்சாபுற
6. லட்சபதிய வடக்கு
7. உயன
8. லட்சபதிய தெற்கு
9. கட்டுபெத்த வடக்கு
10. கட்டுபெத்த தெற்கு
11. மோல்பே
12. ராவதாவத்த கிழக்கு
13. ராவதாவத்த மேற்கு
14. இடம
15. கடலான
16. மொரட்டுமுல்ல மேற்கு
17. மொரட்டுமுல்ல
18. வில்ரோவத்த மேற்கு
19. வில்ரோவத்த கிழக்கு
20. இதிபெத்த கிழக்கு
21. இதிபெத்த மேற்கு
22. மோரட்டுவெல்ல வடக்கு
23. மோரட்டுவெல்ல தெற்கு
24. கொரலவெல்ல மேற்கு
25. கொரலவெல்ல கிழக்கு
26. கட்டுகுருந்த வடக்கு
27. கட்டுகுருந்த தெற்கு
28. எகொடஉயன வட மத்திய
29. எகொடஉயன தெற்கு

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மாநகரமுதல்வர்கள்

1997 – 2001 திரு ஏ.டி.கே. சந்திரதாஸ
2001 – 2002 திரு ஆர்.ஏ. ஆனந்த குசும்சிரி
2002 – 2006 திரு ராவிநாத் ஜே. குணசேகர
2006 – 2010 திரு டப்ளியூ சமன்லால் பெர்னாண்டோ
2011 – 2016 திரு டப்ளியூ சமன்லால் பெர்னாண்டோ
2018 – முதல் தற்போது வரை திரு டப்ளியூ சமன்லால் பெர்னாண்டோ

மொறட்டுவை மாநகர சபையின் முன்னாள் பிரதி மாநகர முதல்வர்கள்

1997 – 1999 திரு விராந்தா பெர்னாண்டோ
1999 – 2001 திரு ஆனந்த குசும்சிரி
2001 – 2002 திரு லக்சிரி கயான்
2002 – 2006 திரு தம்மிக பெர்னாண்டோ
2006 – 2009 திரு மேபரிஸ் விஜெரத்ன
2009 – 2010 திரு டி.எம். சுஜித் புஷ்பகுமார
2011 – 2016 திரு டி.எம். சுஜித் புஷ்பகுமார
2018 – முதல் தற்போது வரை திரு டி சமந்த சில்வா

மொறட்டுவை மாநகர சபையின் முன்னாள் மாநகர ஆணையர்கள்

1997 – 2000 திரு ஏ.ஜே. கருணாரத்ன
2000 – 2002 திரு யு.டி.சி. பெர்னாண்டோ
2002 – 2006 திரு ஏ.எல்.எஸ். மல்வான்ன
2006 – 2010 திரு வி.சி. வர்ணகுலசூரிய
2010 – 2012 திரு யு.டி.சி. பெர்னாண்டோ
2012 – திருமதி எச்.டி.சி. ஜானகி
2012 – திருமதி எச்.என்.எஸ். அங்கம்மன
2012 – 2013 திரு ஏ.எல்.எஸ். மல்வான்ன
2013 – 2014 திருமதி எஸ்.கே. ஜயசுந்தர
2014 – திரு பி.என். தம்மிந்த குமாரா
2014 – 2015 திருமதி எச்.என்.எஸ். அங்கம்மன
2015 – திரு டி.எம். கருணாரத்ன
2015 – 2016 திரு எஸ்.டி. தெவரப்பெரும
2016 – 2017 திரு எம்.எம்.சி.கே.கே. மாண்ணப்பெரும
2017 – 2018 திருமதி சாந்தா பி லியானகே
2018 – திருமதி எஸ்.கே. ஜயசுந்தர
2018 – முதல திரு கே.ஏ. திலகரத்ன

நிலைக்குழுக்கள் மற்றும் செயல்பாடுகள்

மாநகர முதல்வர் மாநகர சபையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மோறட்டுவை பிரதேச மக்களின் வாக்களிப்பில் தெரிவான மாநகர முதல்வர் மற்றும் பிற 48 கவுன்சிலர்களும் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்ற தீர்மானம் எடுக்கும் செய்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்புடன் மாநகரசபை 9 நிலைக்குழுக்களை நடத்துகின்றது. கவுன்சிளர்கள் தனி குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

  1. நிலங்கள், வீடுகள், வாகனங்கள் மற்றும் நகர அபிவிருத்திக்கான நிலைக்குழு.
  2. ஸ்தாபன விவகாரங்கள், சட்ட விவகாரங்கள், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக்கான நிலைக்குழு.
  3. பொது பயன்பாட்டு சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நிலைக்குழு
  4. சுகாதாரம், சௌபாக்கியம் மற்றும் சந்தைகளுக்கான நிலைக்குழு
  5. விளையாட்டு, நலன்புரி மற்றும் பொது மகிழ்ச்சி நடவடிக்கைகளுக்கான நிலைக்குழு.
  6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாடு, யுனிசெஃப் திட்டங்கள், களஞ:சியப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களுக்கான நிலைக்குழு.
  7. உற்பத்தித் திறன் உருவாக்கம், நிதி உருவாக்கம் மற்றும் கையாளுதலுக்கான நிலைக்குழு.
  8. கைத்தொழில்கள், சாலைகள், நீர் வழங்கள், வடிகால், மின்சாரம் மற்றுமு; தெரு விளக்குகளுக்கான நிலைக்குழு.
  9. நிதிக்கான நிலைக்குழு.

அந்த நிலை குழுக்களால் எடுக்கப்பட்ட பரிந்துறைகள் மாநகர சபையால் (மஹா சபாவ) அங்கீகரிக்கப்படுகின்றன. சுபை அனைத்து கவுன்சிலர்களின் பங்கேற்புடன் மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் மாநகர ஆணையரே மாநகர சபையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவரது மேற்பார்வையின் கீழ் மொறட்டுவை மாநகரம் மற்றும் அதன் மக்களுக்கு வசதியாக 11 திணைக்களங்களும் உள்ளன.